Published:Updated:

மும்பை அருகே சொகுசு பஸ் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 17 பேர் பலி!

மும்பை அருகே சொகுசு பஸ் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 17 பேர் பலி!
மும்பை அருகே சொகுசு பஸ் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 17 பேர் பலி!

மும்பை: மும்பை அருகே சொகுசு பஸ் ஒன்று, 2 கார்கள் மீது மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே மும்பை-புனே எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (5-ம் தேதி) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஸ்விப்ட் சொகுசு கார் ஒன்று பஞ்சராகி நின்றிருக்கிறது. அப்போது அந்த வழியாக இன்னோவா காரில் வந்தவர்கள் தங்களது காரை அருகே நிறுத்திவிட்டு, ஸ்விப்ட் காரில் வந்தவர்களுக்கு உதவி செய்திருக்கின்றனர்.

அப்போது, சாத்ராவில் இருந்து மும்பை நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று இரண்டு கார்கள் மீதும் மோதி அருகே இருந்த 20 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்து நொருங்கியிருக்கிறது. இதில், பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும், 33 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே லாரி-பஸ்-கார் மோதி விபத்துள்ளானதிலும், 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.