Published:Updated:

குஜராத்: பட்டம் விட்டபோது விபரீதம்; மாஞ்சா நூலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

பட்டம்
News
பட்டம்

பட்டம் பறக்க விடும் மாஞ்சாக் கயிறு கழுத்தில்பட்டு மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உயிரிழந்திருக்கின்றனர்.

குஜராத்: பட்டம் விட்டபோது விபரீதம்; மாஞ்சா நூலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

பட்டம் பறக்க விடும் மாஞ்சாக் கயிறு கழுத்தில்பட்டு மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உயிரிழந்திருக்கின்றனர்.

Published:Updated:
பட்டம்
News
பட்டம்

குஜராத்தில் உத்தராயன் எனப்படும் மகர சங்கராந்தி அன்று பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது வீட்டின் மாடி, காலியான இடத்துக்கு பொதுமக்கள் திரளாக வந்து பட்டம் விடுவது வழக்கம். பட்டம் விடும்போது அதன் கயிறு அறுந்து பொதுமக்கள், பறவைகளின் கழுத்தில் சிக்கிக்கொண்டு பலரும் பாதிக்கப்படுவதுண்டு. குஜராத்தில் மட்டும் இந்த ஆண்டு இந்தப் பண்டிகையின்போது மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து உயிரிழந்திருக்கின்றனர்.

சஞ்சய்
சஞ்சய்

இது தவிர 176 பேர் இந்த நூல் கழுத்தில் பட்டு காயம் அடைந்திருக்கின்றனர். குஜராத்தின் பாவ்நகரில் கீர்த்தி என்ற 2 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்துவிட்டது. சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துவிட்டார். விஷ்நகரில் கிஷ்மத் என்ற 3 வயது குழந்தை தன்னுடைய தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பட்டம் விடும் நூல் கழுத்தில் பட்டு அறுத்துவிட்டது. ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்படும், அதிகப்படியான ரத்தம் வெளியேறி உயிரிழந்துவிட்டார்.

இதே போன்று ராஜ்கோட்டில் ரிஷப் என்ற 7 வயது சிறுவன் தன் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காந்தி நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்ச நூல் கழுத்தில் பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் கடந்த 14, 15-ம் தேதிகளில் மாஞ்சாக் கயிறுபட்டு 1,200-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருக்கின்றன. மும்பையில் 900-க்கும் மேற்பட்ட பறவைகள் கயிற்றில் சிக்கி கீழே விழுந்தன.

அவற்றை விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். மும்பையில் ஒருவர் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்தார். சஞ்சய் (47) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் பிவாண்டியிலிருந்து உல்லாஸ் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி உயிரிழந்தார்.