Published:Updated:

திருப்பத்தூர்: மலைப் பாதையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து! - பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு

விபத்து

திருப்பத்தூர் அருகே மலைப் பாதையில் சென்ற மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர்: மலைப் பாதையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து! - பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு

திருப்பத்தூர் அருகே மலைப் பாதையில் சென்ற மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published:Updated:
விபத்து

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை நெடிதுயர்ந்த மலைகளால் இணைக்கிறது ஜவ்வாது மலைத்தொடர். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரில், பார்வைக்கு அகப்படாத நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில், பெரும் மலைகளின் இடுக்குகளிலுள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளின்கீழ் 32 கிராமங்கள் வருகின்றன. இந்த கிராமங்கள், திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டவை. இந்த நிலையில், அந்த மலையிலுள்ள சேம்பரை என்ற பகுதியிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மலை கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக இன்று காலை சென்றுள்ளனர். புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரும் திறந்த மினிவேனில், அந்தக் கோயிலுக்குப் புறப்பட்டனர். வேனை பரந்தராமன் என்பவர் ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள்
விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள்

இந்த நிலையில், மலைப் பாதை சரியில்லாததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த கோர விபத்தில், 11 பேர் மரணமடைந்திருப்பதாக, அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. முன்னதாக சுகந்தா, துர்கா, மங்கை, செல்வி மற்றும் 12 வயது சிறுமிகளான பவித்ரா, பரிமளா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலும், 16 வயதாகும் ஜெயப்பிரியா என்ற சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11-ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிற்பகலில் நடந்த விபத்து:

மலைப் பகுதி என்பதால், தொலைத்தொடர்பு வசதியில் பெரும் சிக்கல் நிலவுகிறது. மேற்கண்ட இந்த விபத்து, பிற்பகல் 11.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிக்னல் பிரச்னைக் காரணமாக, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குக்கூட தகவல் தெரிவிக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பத்தூர்: மலைப் பாதையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து! - பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு

இந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism