Published:Updated:

உ.பி: ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்துகள் - 8 பேர் பலி, 20 பேர் காயம்!

உத்தரப்பிரதேசம் - விபத்து

பேருந்துகள் நரேந்தர்பூ மாத்ரஹா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவையடுத்த பாராபங்கி மாவட்டத்தில் `டபுள் டெக்கர்’ எனப்படும் இரண்டடுக்குகள் கொண்ட இரண்டு பேருந்துகள் பீகாரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அப்போது பேருந்துகள் நரேந்தர்பூ மாத்ரஹா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்தக் கோர விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் லக்னோ விபத்து சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.