Published:Updated:

ரெயிலில் படிக்கட்டுப் பயணம்! மின்கம்பத்தில் மோதி மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்

சென்னை பரங்கிமலை அருகே, மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம்செய்தபடி சென்ற மூன்று பயணிகள், மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

இன்று காலை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் பலர், படிக்கட்டில் பயணம்செய்தபடி சென்றனர்.

பரங்கிமலை - பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, மின்கம்பத்தில் மோதி ஏழு பேர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தனர். இவர்களில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்தவர்களில் ஒருவர், பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரவீன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூன்று பேரின் விவரம்குறித்து விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு