Published:Updated:

ஸ்பைஸ் ஜெட்–இண்டிகோ விமானம் விபத்தில் இருந்து தப்பியது!

Vikatan Correspondent
ஸ்பைஸ் ஜெட்–இண்டிகோ விமானம் விபத்தில் இருந்து தப்பியது!
ஸ்பைஸ் ஜெட்–இண்டிகோ விமானம் விபத்தில் இருந்து தப்பியது!
ஸ்பைஸ் ஜெட்–இண்டிகோ விமானம் விபத்தில் இருந்து தப்பியது!

ஸ்பைஸ் ஜெட்–இண்டிகோ விமானம் இரண்டும் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 142 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாய் புறப்பட்டுச் செல்ல தயாராக இருந்தது. இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, ஓடுபாதையில் விமானிகள் வேகமாக இயக்க தோடங்கினர். அதே நேரத்தில், இண்டிகோ விமான அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, டாகிஸ்வே-யில் முயல்கள் அதிகம் இருப்பதால் அனுமதி கிடைக்காமல் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஸ்பைஸ் ஜெட் விமான ஓட்டிகளைத் தொடர்பு கொண்டு, புறப்பட்ட விமானத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். அதற்குள் ஸ்பைஸ் ஜெட் விமானம் இண்டிகோ விமானத்தை நெருங்கி விட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓட்டுநர், சாமர்த்தியமாகச் செயல்பட்டு இண்டிகோ விமானத்தின் அருகில் சென்று நிறுத்தினார். இதனால், விமானம் இரண்டும் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் தப்பினர்.