Published:Updated:

ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!
ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!
ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாம  நோயாளிகள் அலறியடித்து பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில்,இங்குள்ள கீழ்தளத்தில் எக்ஸ்ரே பிரிவு அருகே எலெக்ட்ரிக்கல் அறை  உள்ளது.இங்கு இன்று காலை 10.45 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து  ஏற்பட்டது.

மின்வயரில் பற்றிய தீ சிறிது நேரத்தில் அறை முழுவதும் மளமளவென பரவியது.  எலெக்ட்ரிக்கல் அறை தீப்பிடித்து எரிவதை கண்டதும் எக்ஸ்ரே பிரிவில் காத்திருந்த  நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கீழ்தளத்தில் நின்று கொண்டிருந்தவர்களும் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.இதையறிந்ததும்  மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  எலெக்ட்ரிக்கல் அறையில் பிடித்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.  இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.