Published:Updated:

வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 4 பேர் பரிதாப பலி

அஸ்வினி.சி
வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 4 பேர் பரிதாப பலி
வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 4 பேர் பரிதாப பலி

சென்னை வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் ஐந்து பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நேர்ந்துள்ளது.  புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுத்தான் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 4 பேர் பரிதாப பலி

உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரு சக்கர வாகன நிறுத்தத்தில்தான் முதலில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. குடியிருப்புப் பகுதியின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகிவிட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பலிவாங்கிய இந்தத் தீ விபத்துக்கு மின் துறையினரின் கவனக்குறைவு காரணமா அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் போதுமான தீயணைப்பு வசதி இல்லையா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 4 பேர் பரிதாப பலி