Published:Updated:

லேசான மழையால் பெல்லந்தூர் ஏரியில் ஏற்படவிருந்த பெரிய விபத்து தவிர்ப்பு!

அஸ்வினி.சி
லேசான மழையால் பெல்லந்தூர் ஏரியில் ஏற்படவிருந்த பெரிய விபத்து தவிர்ப்பு!
லேசான மழையால் பெல்லந்தூர் ஏரியில் ஏற்படவிருந்த பெரிய விபத்து தவிர்ப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பெல்லந்தூர் ஏரியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது. 


 

பெங்களூரின்  தென்கிழக்குப் பகுதியில் 1,000 ஏக்கரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரி, அப்பகுதியின் மிகப்பெரிய நீர்ப்பாசனமாகக் கருதப்படுகிறது. கடந்த சில வருடங்களாக போதிய பராமரிப்பின்றி பெல்லந்தூர் ஏரி தண்ணீரில் வேதிப் பொருள்கள் கலந்துவிட்டன. சுற்றியுள்ள தொழிற்சாலைகள் குப்பைகளையும் ரசாயனக் கழிவுகளையும் பெல்லந்தூர் ஏரியில்தான் கொட்டி வருகின்றன. அந்த ஏரி தற்போது குப்பை மற்றும் உலர்ந்த தாவரங்களால் சூழப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று நண்பகலில் ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகள் புகையால் சூழப்பட்டன.  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். அச்சமயம் அங்கு லேசான மழை பெய்ததால் தீ தானாக அணைந்து, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அங்குள்ள மக்கள் மழைக்கு நன்றி தெரிவித்து, தீயணைப்பு வீரர்களை கடுமையாக சாடினர்.