Published:Updated:

நடந்தது என்ன? வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் பகீர் தகவல்!

சகாயராஜ் மு
வி.ஶ்ரீனிவாசுலு
நடந்தது என்ன? வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் பகீர் தகவல்!
நடந்தது என்ன? வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் பகீர் தகவல்!

தீவிபத்து ஏற்பட்ட வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஜான் கிறிஸ்டோ என்பவர், உரிமையாளர்மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை கீழ்த்தளத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீப்பிடித்தது. அந்தத் தீ அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை என்பதால் மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.

தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சேர்ந்த கும்பகோணம் என்பவரின் மனைவி மீனாட்சி, தட்சணாமூர்த்தி என்பவரின் மனைவி செல்வி, சந்துரு என்பவரின் மகள் செல்வி சாலினி மற்றும் நாராயணன் என்பவரின் மகன் சிறுவன் சஞ்சய்  ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர். தீக்காயம் ஏற்பட்ட ஐந்து பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட தீ பிறகு இருசக்கர வாகனங்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு

தற்போது, அடுக்குமாடிக் குடியிருப்பை சீல் வைத்துள்ள வடபழனி காவல்துறையினர், விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்தத் தீ விபத்துச் சம்பவம் கவலைக்குரியதாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையைப் பொறுத்துதான் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை வடபழனியில் தீவிபத்து ஏற்பட்ட கட்டடம் முறையான அனுமதி இல்லை என்றும், உரிய அங்கீகாரம் இல்லாததால் கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில்  வசித்து வந்த ஜான் கிறிஸ்டோ என்பவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், வடபழனி குடியிருப்பு கட்டடத்துக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைத்தது பற்றி அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டதற்கு பிரச்னை சரியாகிவிட்டது என்று கூறினார். மாடிக்குச் செல்லும் கதவை குடியிருப்பு உரிமையாளர்  பூட்டியிருந்ததால் தப்பிக்க முடியவில்லை" என்று கூறினார்.