Published:Updated:

இமாச்சல்: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!

விபத்துக்குள்ளான பேருந்து ( ட்விட்டர் )

காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்தது.

இமாச்சல்: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!

காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்தது.

Published:Updated:
விபத்துக்குள்ளான பேருந்து ( ட்விட்டர் )

இமாச்சலப் பிரதேச மாநிலம், குலுவிலிருந்து சைன்ஞ் நோக்கி பள்ளி மாணவர்கள் உட்பட 40 பேரை அழைத்துக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த கிராமவாசிகள் காவல்துறைக்குத் தகவலளித்தனர். மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து
ட்விட்டர்

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக குலு துணை ஆணையர் அசுதோஷ் கர்க், ``சைஞ்ச் நோக்கிச் சென்ற பேருந்து காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகேயிருக்கும் பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்தில் 40 மாணவர்கள் வரை இருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்" எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விபத்து தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ``இமாச்சலப் பிரதேச மாநிலம், குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்தத் துயரமான நேரத்தில் என்னுடைய நினைவு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்." எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.