Published:Updated:

கர்நாடகா: லாரி - ஜீப் மோதி கோர விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியான சோகம்

கர்நாடகாவில் விபத்து ( ட்விட்டர் )

கர்நாடக மாநிலத்தில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா: லாரி - ஜீப் மோதி கோர விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியான சோகம்

கர்நாடக மாநிலத்தில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கர்நாடகாவில் விபத்து ( ட்விட்டர் )

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் இன்று அதிகாலை தினசரிக் கூலித் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வேலைக்காக பெங்களூருக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணி அளவில் லாரி மீது ஜீப் மோதியிருக்கிறது. இந்தக் கோரச் சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் விபத்து
கர்நாடகாவில் விபத்து
ட்விட்டர்

இதையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.