Published:Updated:

`தேனி அருகே திடீர் காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர்!’ - மூவர் உயிரிழப்பு?

மலை அடிவாரம்
மலை அடிவாரம்

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஏலத்தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மலைப்பாதை வழியாக சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தவர்கள், காட்டுத்தீயில் சிக்கி சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கணி டிரெக்கிங்... இனி தடையில்லை - அனுமதி பெறுவது ஈஸி!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது ராசிங்காபுரம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, கிருஷிகா, விஜயமணி, மகேஷ், வஞ்ரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், ஆனந்த், மஞ்சு ஆகிய ஒன்பது பேர், கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பேத்தொட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள ஏலத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு இன்று சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு, காலை புறப்படுள்ளனர்.

காட்டுத்தீ
காட்டுத்தீ

கொரோனா அச்சம் காரணமாக போடி மெட்டில் இருந்து போடிக்கு பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. மேலும், இன்று 144 தடை உத்தரவு அமலில் வந்துவிடும் என்பதால், பேருந்துகள் ஏதும் போடி மெட்டு வரவில்லை எனத் தகவல் கிடைக்கிறது.

இந்நிலையில், பேத்தொட்டியில் ஊச்சலூத்து மலைப்பாதை வழியாக ராசிங்காபுரம் செல்லலாம் எனத் திட்டமிட்ட ஒன்பது பேரும், இன்று மதியம் மலைப்பாதை வழியாக நடந்து வந்துள்ளனர். வழியில், எதிர்பாராத விதமாகக் காட்டுத்தீ அவர்களை சுற்றி வளைத்துள்ளது.

மலை அடிவாரம்
மலை அடிவாரம்

இதில், மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல் வெளியானது. இதை அறிந்த போடி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் 50 பேர், காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க புறப்பட்டுள்ளனர்.

தடையை மீறி ட்ரெக்கிங்... மீண்டும் சர்ச்சையில் குரங்கணி... கண்டுகொள்ளாத கேரளா!

மலை அடிவாரத்தில், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பலியானதாகக் கூறப்படும் மூவரில், 3 வயதுப் பெண் குழந்தை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அப்பகுதியில், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வரும்பட்சத்தில்தான் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறும். இரவு நேரம் ஆனதால், மீட்கப்பட்டவர்களை மலைப்பாதையில் கொண்டுவர சிரமம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. குரங்கணி சம்பவம் போன்றதொரு சம்பவம் தேனியில் நடந்திருப்பது தேனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு