Published:Updated:

உத்தரப்பிரதேசத்தில் விபத்தைத் தடுக்க புது முயற்சி!

ஆர். ஜெயலெட்சுமி
உத்தரப்பிரதேசத்தில் விபத்தைத் தடுக்க புது முயற்சி!
உத்தரப்பிரதேசத்தில் விபத்தைத் தடுக்க புது முயற்சி!
உத்தரப்பிரதேசத்தில் விபத்தைத் தடுக்க புது முயற்சி!

த்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அலைப்பேசியால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அரசு பஸ் டிரைவர்கள் பஸ் ஓட்டும்போது மொபைலில் பேசுவதைப் பார்த்தால், உடனே அதைப் படம் எடுத்து அரசின் சமூக வலைதளத்துக்கு அனுப்ப வேண்டும். டிரைவருக்கு அபராதம் விதிப்பதோடு, சமூக வலைதளத்துக்குப் படம் அனுப்புபவருக்குப் பரிசு உண்டாம். இந்த அறிவிப்பு, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. இதன்மூலம் விபத்தைத் தடுக்க இயலும் என உத்தரப்பிரதேச அரசு நம்புகிறது.