Published:Updated:

லாரிகள் மோதல்: 25 பக்தர்கள் விபத்தில் பலி!

பிவானி: ஹரியானாவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25  பக்தர்கள் பலியாயினர். 

ஹரியானா மாநிலம், கெய்தால் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 25 பேர் மினி லாரி  ஒன்றில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குகா மாரி கோவிலுக்கு சாமி தரிசனம்  செய்வதற்காக சென்றனர்.

##~~##
அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு  இன்று அதிகாலை கிளம்பி, ஊருக்கு வந்து  கொண்டிருந்தனர். ஹரியானா மாநிலம், பிவானி மாவட்டம் சிவானி என்ற இடத்தில்  வந்த போது,அவர்கள் வந்த மினி லாரியும், மற்றொரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்  கொண்டன.
இதில் மினி லாரியில் வந்த பக்தர்களில் 22 பேர் அதே இடத்தில் பலியாகினர்.  படுகாயம் அடைந்த 3 பேர் பிவானி மற்றும் ஹிஸார் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் 3 பேரும் மரணம் அடைந்தனர்.