Published:Updated:

ஒலிம்பிக்: இந்திய அணியினருடன் சென்ற பெண் மன்னிப்பு கோரினார்!

ஒலிம்பிக்: இந்திய அணியினருடன் சென்ற பெண் மன்னிப்பு கோரினார்!
ஒலிம்பிக்: இந்திய அணியினருடன் சென்ற பெண் மன்னிப்பு கோரினார்!

பெங்களூர்:ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியினருடன் சென்ற பெண்  மன்னிப்பு கோரியுள்ளார்.

லண்டன்  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணி அணிவகுத்து சென்ற  போது ஒரு மர்ம பெண் அணியினருடன் சென்றது பெருத்த சர்ச்சையை கிளப்பியது.  அந்த பெண் பெங்களூரை சேர்ந்த மதுரா நாகேந்திரா என்றும், ஒலிம்பிக் தொடக்க நடன  நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவர் ஆர்வக்கோளாறில் இந்திய அணியினருடன்  சென்றதும் பின்னர் தெரியவந்தது.

ஒலிம்பிக்: இந்திய அணியினருடன் சென்ற பெண் மன்னிப்பு கோரினார்!
##~~##
இந்த சம்பவத்துக்கு இந்திய அணியினர் கண்டனம் தெரிவித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு  கடிதம் அனுப்பியது. நடந்த சம்பவத்துக்கு லண்டன் ஒலிம்பிக் கமிட்டி வருத்தம்  தெரிவித்தது. இந்த நிலையில் பெங்களூர் திரும்பிய மதுரா நாகேந்திரா தனது செயலுக்கு  வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,"நான் இந்திய அணியினருடன் நடந்து சென்றது எனது  தவறான முடிவாகும். நான் பாதுகாப்பு விதிமுறைகள் எதனையும் மீறவில்லை.  முறையான அனுமதி பெற்று தான் சென்றேன். நடன கமிட்டியில் நான் இடம் பெற்று  இருந்தேன். நமது மக்களின் உணர்வை நான் காயப்படுத்தி விட்டேன். எனது தவறை  நான் உணர்ந்து விட்டேன். அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று  தெரிவித்துள்ளார்.