Published:Updated:

உறவினர் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பொறியியல் மாணவர்; கதறும் பெற்றோர்... நாமக்கல்லில் சோகம்!

மரணம் ( சித்திரிப்புப் படம் )

புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெறவிருந்த வீட்டுக்கு, எலக்ட்ரீசியனாகப் பணிபுரிய சென்ற பொறியியல் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உறவினர் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பொறியியல் மாணவர்; கதறும் பெற்றோர்... நாமக்கல்லில் சோகம்!

புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெறவிருந்த வீட்டுக்கு, எலக்ட்ரீசியனாகப் பணிபுரிய சென்ற பொறியியல் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், விசைத்தறி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மகன் பிரகாஷ். பிரகாஷ் அங்கிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். அதோடு, தனது கல்லூரி விடுமுறை நாள்களில் பகுதிநேரமாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்தப் பணத்தைக் கொண்டு, தனது படிப்புக்கான செலவைப் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆனங்கூர் சாலையில் உள்ள பள்ளிகாடு என்ற இடத்தில் தன் உறவினர் செல்லம்மாள் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு எலக்ட்ரீசியனாக பிரகாஷ் வேலைப் பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து, புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காகவீட்டுக்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெறுவதற்காக இவர் அருகில் உள்ள தொழிற்சாலையிலிருந்து மும்முனை மின்சாரம் இணைப்பு கொடுக்க முயன்றிருக்கிறார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் பிரகாஷின் கை உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, தகவலறிந்த குமாரபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்தச் சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரகாஷின் பெற்றோர், ``எங்களுக்கு பணக்கஷ்டம் கொடுக்க கூடாது'னு... நீயே வேலைக்குப் போய் சம்பாதிச்சு, அந்தப் பணத்தைக் கொண்டு படிச்சியே. இப்ப, ஒரேயடியாக எங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துட்டு, இப்படி போயிட்டியே" என்று மருத்துவமனையில் கதறியது, அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism