Published:Updated:

ஹோட்டலை மூடிவிட்டு வீடு திரும்பியபோது... லாரி மோதியதில் மராத்தி டி.வி நடிகை பலியான சோகம்!

கல்யாணி

மகாராஷ்டிராவில் மராத்தி டி.வி நடிகை சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் நடிகை கல்யாணி உயிரிழந்தார்.

ஹோட்டலை மூடிவிட்டு வீடு திரும்பியபோது... லாரி மோதியதில் மராத்தி டி.வி நடிகை பலியான சோகம்!

மகாராஷ்டிராவில் மராத்தி டி.வி நடிகை சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் நடிகை கல்யாணி உயிரிழந்தார்.

Published:Updated:
கல்யாணி

மராத்தி டி.வி தொடர்களில் நடித்திருப்பவர் கல்யாணி குராலே. இவர் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் வசித்துவந்தார். டி.வி நிகழ்ச்சிகளிலில் வாய்ப்பு குறைந்ததால், கோலாப்பூர் அருகே ஹலோண்டி என்ற இடத்தில் சமீபத்தில் ஹோட்டல் ஒன்றைத் திறந்திருந்தார். வழக்கமாக இரவு ஹோட்டலை மூடிவிட்டு, அவர் தனது இரு சக்கர வாகனத்தில் கோலாப்பூர் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் இரவு 10:30 மணிக்குத் தனது ஹோட்டலை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். வாகனம் சாங்கிலி-கோலாப்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்த கான்கிரீட் மிக்ஸர் ஏற்றிவந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

ஹோட்டலை மூடிவிட்டு வீடு திரும்பியபோது... லாரி மோதியதில் மராத்தி டி.வி நடிகை பலியான சோகம்!

இதில் கல்யாணி பலத்த காயமடைந்தார். சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீஸார், கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். போலீஸார் லாரி டிரைவரைக் கைது செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் இந்த விபத்து நடந்ததால், காயமடைந்த கல்யாணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி, விபத்துக்குச் சிறிது நேரத்துக்கு முன்புகூட சில தகவல்களைப் பதிவிட்டிருந்தார். கோலாப்பூரில் பிறந்து வளர்ந்த கல்யாணி, தனது நடிப்புக்காக புனேவுக்குக் குடிபெயர்ந்தார். கொரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். 32 வயதாகும் கல்யாணி இளம் வயதில் விபத்தில் மரணமடைந்த செய்தி மராத்தி டி.வி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரை உலகினர் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.