Published:Updated:

அதிவேகமாக வந்த பைக்; தூக்கி வீசப்பட்ட தாய், கை குழந்தையுடன் பலி - சென்னையில் நடந்த சோகம்!

விபத்து ஏற்படுத்திய பைக்

சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிவேகமாக பைக் ஒட்டி வந்த நபர் மோதியதில் கை குழந்தையுடன் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வந்த பைக்; தூக்கி வீசப்பட்ட தாய், கை குழந்தையுடன் பலி - சென்னையில் நடந்த சோகம்!

சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிவேகமாக பைக் ஒட்டி வந்த நபர் மோதியதில் கை குழந்தையுடன் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விபத்து ஏற்படுத்திய பைக்

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவருக்குப் பிறந்து ஆறு மாதமான ஒரு பெண் குழந்தை இருந்தது. பூங்குழலி இன்று அதிகாலையில் தனது குழந்தையுடன், அண்ணா ஆர்ச் பகுதியில் உள்ள தனது கடைக்குச் சென்றுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய நபர்
விபத்து ஏற்படுத்திய நபர்

இவர் சாலையைக் கடக்க முற்படும்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த பைக் பூங்குழலி மீது மோதியதில், குழந்தையுடன் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில், பூங்குழலியும் அவரின் ஆறு மாத கை குழந்தையும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த போலீஸார், உடல்களைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், அதிவேகமாக பைக் ஓட்டிவந்த இளைஞர், அவருடன் வந்த பெண் ஆகிய இருவரிடமும் அண்ணாநகர் கே 4 காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

முதற்கட்டமாக அந்த இளைஞர் மது போதையிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. விபத்தில் தாய், சேய் இருவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, சென்னையில் நேற்று (08.10.22) நந்தனம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.