Published:Updated:

சென்னை: உயர் மின் அழுத்த கேபிள்... செல்போனில் பேசிக்கொண்டிருந்த வடமாநில பெண்ணைத் தாக்கிய மின்சாரம்!

உடல் கருகிய வடமாநில பெண்
News
உடல் கருகிய வடமாநில பெண்

தாம்பரத்தில் உயர் மின் அழுத்த கேபிள் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

சென்னை: உயர் மின் அழுத்த கேபிள்... செல்போனில் பேசிக்கொண்டிருந்த வடமாநில பெண்ணைத் தாக்கிய மின்சாரம்!

தாம்பரத்தில் உயர் மின் அழுத்த கேபிள் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

Published:Updated:
உடல் கருகிய வடமாநில பெண்
News
உடல் கருகிய வடமாநில பெண்

சென்னை தாம்பரத்தில் இருக்கும் சானிடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பல தனியார் நிறுவனங்கள் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பல வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவருகிறார்கள். அப்படி, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் திருநீர்மலை சாலையிலுள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருக்கின்றனர்.

விடுதி அறை
விடுதி அறை

இந்த விடுதி அமைந்திருக்கிற இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள் செல்கிறது. இந்தக் கட்டடத்தின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால் ஜன்னல் கிரில் கம்பிகளைக் கழட்டி வைத்துவிட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்த விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற 19 வயது பெண் தங்கியிருந்திருக்கிறார்.

நேற்று காலை அவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் தனது பவர் பேங்கில் ஜார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர், உயர் அழுத்த மின்சார கேபிள் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு காயப்போட்டிருந்த துணி கீழே விழுந்திருக்கிறது. அதை ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டு எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

அப்போது, உயர் அழுத்த மின்சார கேபிளிலிருந்து கும்கும் குமாரி மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில், மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பலரும் வெளியே வந்து பார்த்திருக்கின்றனர்.

அப்போது அந்தக் கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஊர்மிளா குமாரி, பூனம் என்ற இரண்டு பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. சம்பவமறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமான மின் சேவையைத் துண்டித்திருக்கின்றனர். பலத்த காயம் ஏற்பட்ட கும்கும் குமாரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மின்வாரிய ஊழியர்கள்
மின்வாரிய ஊழியர்கள்

மேலும், இருவர் தாம்பரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்துவருகிறார்கள். மேலும், அந்த விடுதி அனுமதி பெற்று நடைபெற்று வருகிறதா என்று கட்டட உரிமையாளரிடமும், விடுதி மேற்பார்வையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.