Published:Updated:

''நானும் செத்துப்போறேன்னு அழுதார்''- நந்தனம் விபத்தில் தோழிகளை இழந்த சிவா கண்ணீர்!

ஆ.சாந்தி கணேஷ்

''சிவாவின் இரண்டு கால்களிலும் பாதத்தில் இருந்த எலும்புகள் உடைந்துவிட்டன.''

விபத்து
விபத்து

சில வாரங்களுக்கு முன், நந்தனம் சிக்னல் அருகே ஓர் இளைஞர், இரண்டு இளம்பெண்களுடன் வந்த பைக் ஒன்று பேருந்தில் இடித்ததும், சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்களும் இறந்ததும் எல்லோரும் அறிந்த விஷயம்தான். காயங்களுடன் பிழைத்துக்கொண்ட அந்த இளைஞர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அந்த விபத்து தொடர்பான தகவல்கள் அறிந்த காவல்துறை அதிகாரி ராஜேஷிடம் பேசினோம்.

மூணு பேருமே பி.டெக் படித்தவர்கள். சென்சார் அண்டு அனலைசிங் சார்ந்த வேலைகளில் 3 மாதம் பயிற்சி எடுப்பதற்காக சென்னைக்கு வந்திருக்காங்க.''
காவல்துறை அதிகாரி

''அந்த இளைஞர் பெயர் சிவா. சொந்த ஊர் ராஜமுந்திரி. விபத்து நடந்த அன்றைக்கு, 'என் ஃப்ரெண்ட்ஸே இறந்துபோயிட்டாங்க. நான் மட்டும் எதுக்கு உயிரோட இருக்கணும்'னு அழுதுக்கிட்டே இருந்தாரு. மனத்தளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தார். முதற்கட்ட சிகிச்சை முடிஞ்சு, அவரும் சொந்த ஊரான ஆந்திராவுக்கு போயிட்டார்.

அன்றைக்கு, பைக்கில் வந்த மூணு பேருமே பி.டெக் படிச்சவங்க. சென்சார் அண்டு அனலைசிங் தொடர்பான வேலைகளில் 3 மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காக சென்னைக்கு வந்திருக்காங்க. இங்கே, அவங்களுக்கு சொந்தக்காரங்க யாரும் கிடையாது. அதனால, வேளச்சேரியில தங்கி இருந்திருக்காங்க. வேலைக்குப் போகும்போதுதான் இப்படியொரு விபத்து.

விபத்து நடந்தபோது
விபத்து நடந்தபோது

சிவாவின் டூ வீலர் இப்போது காவல்துறையிடம்தான் இருக்கு. அவர் உடல் நலம் தேறி வந்தால்தான், இங்கே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். சிகிச்சையில இருக்கிறப்போ, நாங்க யாரையும் விசாரணை செய்தெல்லாம் தொந்தரவு செய்ய மாட்டோம்.

சிகிச்சை முடிந்த பிறகு, நீங்கள் கூப்பிடும்போது விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம் என எழுதிக்கொடுத்துவிட்டு சிவாவை அழைத்துச்சென்றிருக்கிறார்கள்.

விபத்து
விபத்து

அவருக்கு இரண்டு கால்களிலும் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. முதுகெலும்பிலும் அடிபட்டிருக்குன்னு சொன்னாங்க. நாங்க பார்த்தப்போ, பேசற நிலைமையில்தான் இருக்கார். கூடிய சீக்கிரம் நலமாகிடுவாருன்னுதான் நினைக்கிறேன்.''