Published:Updated:

திருச்சி: ராக்கெட்டுக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ஆக்ஸிஜன்; விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

விபத்துக்குள்ளான டேங்கர் லாரி
News
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி

லாரி விபத்துக்குள்ளானதில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்கின்றனர் விஷயமறிந்த அதிகாரிகள்.

திருச்சி: ராக்கெட்டுக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ஆக்ஸிஜன்; விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

லாரி விபத்துக்குள்ளானதில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்கின்றனர் விஷயமறிந்த அதிகாரிகள்.

Published:Updated:
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி
News
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்குச் சொந்தமான ராக்கெட் ஏவுதளம் நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் அமைந்திருக்கிறது. இந்த ஏவுதளத்தில் ராக்கெட்டுக்கு நிரப்பக்கூடிய திரவநிலை ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, புதுச்சேரியிலிருந்து டேங்கர் லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பியிருக்கிறது. இந்த டேங்கர் லாரியை கடலூர் மாவட்டம், மேலப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர் ஓட்டிவந்திருக்கிறார்.

திருச்சி: ராக்கெட்டுக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ஆக்ஸிஜன்; விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் புறக்காவல் நிலையம் அருகே நேற்று காலை லாரி வந்திருக்கிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதியதோடு சென்ட்டர் மீடியன் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வகணபதி அதிர்ஷ்டவசமாக உடலில் சில காயங்களோடு உயிர்த் தப்பினார். அதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, கவிழ்ந்த லாரியிலிருந்து திரவ நிலையிலான ஆக்ஸிஜன் சாலையில் கசிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பஞ்சப்பூர் புறக்காவல் நிலைய போலீஸார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு டேங்கர் லாரி தீ பிடிக்காமல் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பிறகு புதுச்சேரியிலிருந்து மாற்று டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த டேக்கர் லாரியிலிருந்த திரவ ஆக்ஸிஜன் மாற்றப்பட்டு மகேந்திரகிரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

விபத்துக்குள்ளான டேங்கர் லாரி
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி

சம்பவம் குறித்து விஷயமறிந்த அதிகாரிகளிடம் பேசினோம். ``டிரைவர் செல்வகணபதி தூக்கக் கலக்கத்தின் காரணமாகவே டேங்கர் லாரியை பேரிகார்டில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தூக்கம் கண்ணைக் கட்டியதால் விபத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, திருச்சி மன்னார்புரத்தில் லாரியை ஓரம்கட்டிவிட்டு செல்வகணபதி சில நிமிடங்கள் கண் அசந்திருக்கிறார். பின்னர் மீண்டும் தூக்கக் கலக்கத்திலேயே செல்வகணபதியும் லாரியை ஓட்ட ஆரம்பிக்கவே, அடுத்த 3-வது கிமீ-ல் இந்த விபத்து நடந்திருக்கிறது" என்றனர்.