Published:Updated:

நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்!

விபத்து நடந்த கல்குவாரி

நெல்லை அருகே உள்ள கல்குவாரி, விதிமுறைகளை மீறி இரவில் செயல்பட்டுள்ளது. திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த 6 பேர் உயிருடன் பாறைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது.

நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்!

நெல்லை அருகே உள்ள கல்குவாரி, விதிமுறைகளை மீறி இரவில் செயல்பட்டுள்ளது. திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த 6 பேர் உயிருடன் பாறைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது.

Published:Updated:
விபத்து நடந்த கல்குவாரி

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குவாரியில் இரவு பகலாக பணிகள் நடந்துள்ளன. அதிகாலை நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதனால் அந்த குவாரியில் பணிகள் நடந்தபோது பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

குவாரியில் ராட்சத கல் ஒன்று உருண்டு பணியில் இருந்த 3 கிட்டாச்சி ரக இயந்திரங்கள் மற்றும் இரு லாரிகளில் விழுந்துள்ளது. அத்துடன் அங்கு மண் சரிவும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இயந்திரங்களில் பணியாற்றிய மூன்று டிரைவர்கள் மற்றும் லாரிகளில் இருந்த டிரைவர், உதவியாளர் உள்ளிட்ட மூவர் என மொத்தம் 6 பேர் பாறைக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாறை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருந்ததாலும் அங்கு மண் சரிவு தொடர்ந்ததாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

ஆழமாகத் தோண்டப்பட்ட குவாரி
ஆழமாகத் தோண்டப்பட்ட குவாரி

அத்துடன், மிகவும் ஆழமாக பாறைகள் பெயர்த்து எடுக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் உள்ளே சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. அதனால் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாறைக்குள் சிக்கியவர்களை மீட்பது பற்றி ஆலோசித்தனர். ஆனால், அவர்களால் மீட்புப் பணியைத் தொடர முடியாத அளவுக்கு நிலைமை இருந்ததால் திரும்பிச் சென்று விட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், தீயணைப்புப் படையினர் மிகுந்த சிரமத்துடன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டனர். பாறைக்குள் சிக்கிய ஒரு கிட்டாச்சி ரக இயந்திரம் மற்றும் ஒரு லாரியின் பின்பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. மற்ற இயந்திரங்களும் லாரியும் பாறை இடிபாடுகளுக்குள் முழுமையாக மூடிக் கிடந்தன. பெரிய பாறை விழுந்து கிடந்ததால் அதை அகற்றுவதற்கு இயலாத நிலைமை இருந்தது.

குவாரியில் உயிருடன் மீட்கப்பட்டவர்
குவாரியில் உயிருடன் மீட்கப்பட்டவர்

ஆனாலும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் வேகம் காட்டியதால் இருவரை உயிருடன் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு சிறிய காயம் மட்டுமே இருந்தது. உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றொருவர் கூடுதல் காயத்துடன் சிக்கியிருப்பதாகவும் அவரையும் விரைவில் மீட்டு விடுவோம் என்றும் தீயணைப்புப் படையினர் தெரிவித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீட்புப் பணிகள் நடைபெறும் பணிகளை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தினார். தொடர்ந்து பாறைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரவு நேரத்தில் கல்குவாரி செயல்படக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி சிறிய விளக்கு வெளிச்சத்தில் பணிகள் நடந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

தொழிலாளர்கள் சாலை மறியல்
தொழிலாளர்கள் சாலை மறியல்

கல்குவாரி தொழிலாளர்கள் பலரும் சம்பவம் இடத்துக்கு வந்தனர். நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட அவர்கள், பாறை இடுக்கில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளை வேகப்படுத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism