Published:Updated:

அ.தி.மு.க கொடியால் விபத்து... கோவைப் பெண்ணின் கால் அகற்றம்!

கோவையில், அ.தி.மு.க கொடிக்கம்பத்தினால் விபத்து ஏற்பட்ட பெண்ணின் இடது கால் அகற்றப்பட்டது.

அனுராதா
அனுராதா

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜலட்சுமி என்கின்ற அனுராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

அப்போது, அனுராதாவுக்கு விபத்து ஏற்பட்டது. அனுராதா அந்த வழியே செல்லும்போது, அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விழுந்துள்ளது. சடர்ன் பிரேக் போட்ட அனுராதா, கீழே சறுக்கி விழுந்துவிட்டார்.

அப்போது, அங்கு ஒரு லாரியும் வந்துள்ளது. இதையடுத்து, அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது என்று அனுராதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

விபத்து
விபத்து
Vikatan

அனுராதாவுக்குக் கடந்த ஐந்து நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அனுராதாவின் விபத்துக்கும் அ.தி.மு.க கொடிக்கும் சம்பந்தமில்லை என்று போலீஸ் கூறிவருகின்றனர். மேலும், லாரி டிரைவர் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் என்று அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சிகிச்சைபெற்றுவந்த அனுராதாவின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவரின் இரண்டு கால்களுமே பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இடது காலில் ரத்தநாளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அறுவைசிகிச்சை மூலம் செயற்கை ரத்தநாளங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், அது பலனளிக்கவில்லை.

அ.தி.மு.க
அ.தி.மு.க

காலில் சீல் படிந்து, அழுக ஆரம்பித்தது. அது உயிருக்கே ஆபத்து என்பதால், இடது கால் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. உடல்நலம் சற்று தேறிய பிறகு, வலது காலில் உள்ள எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்போம்' என்றனர்.