Published:Updated:

திருவள்ளூர்: அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த சிறுவன் - என்ன நடந்தது?

அங்கன்வாடி மேற்கூரை விபத்து

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

திருவள்ளூர்: அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த சிறுவன் - என்ன நடந்தது?

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

Published:Updated:
அங்கன்வாடி மேற்கூரை விபத்து

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள பூனிமாங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் 17 ஆண் குழந்தைகள், 18 பெண் குழந்தைகள் என மொத்தம் 35 குழந்தைகள் படித்துவருகிறார்கள். இந்த அங்கன்வாடி மையத்தில் சாந்தி என்ற ஆசிரியரும், அம்முலு என்ற சமையல் உதவியாளரும் பணியாற்றிவருகிறார்கள்.

காயமடைந்த சிறுவன்
காயமடைந்த சிறுவன்

இன்று மதியம் உணவு நேரத்தில் குழந்தைகள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். அங்கன்வாடி மையத்தில் விமல்ராஜ், தீனா ஆகிய இரண்டு குழந்தைகள் மட்டும் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த விமல்ராஜின் மீது மேற்கூரை விழுந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்கூரை விழுந்ததில் சிறுவனின் தலையிலும், தாடையிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு சிறுவன் தீனாவுக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இரண்டு சிறுவர்களுக்கும் பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி வழங்கப்பட்டு, கூடுதல் சிகிச்சைக்காகத் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த மேற்கூரை
இடிந்து விழுந்த மேற்கூரை

சம்பவம் அறிந்து வந்த வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். உணவு இடைவேளைக்குக் குழந்தைகள் வெளியே சென்றதால் இன்று அங்கன்வாடிக்கு வந்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர். குழந்தைகளின் மீது அங்கன்வாடி மேற்கூரை விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism