Published:Updated:

மணிப்பூர்: முதல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மீண்டும் நிலச்சரிவு; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

மணிப்பூரில் நிலச்சரிவு ( ட்விட்டர் )

மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

மணிப்பூரின் நோனி மாவட்டம், தூபுலில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், டெரிடோரியல் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஆகியோர் துபுல் ரயில் நிலையத்தின் பொதுப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிவருகின்றன. இந்த துக்கமான சம்பவத்துக்கு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், பிரதமர் மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்துவருகின்றனர். முதல் நிலச்சரிவுவிபத்தில் சிக்கி 18 பிராந்திய ராணுவ வீரா்கள் உட்பட 24 போ் உயிரிழந்துள்ளனர்.மேலும் 38 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!