Published:Updated:

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... காற்றில் கலந்த ரசாயனம்?!

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - குஜராத்

குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திரைப்பட காட்சிகளை விஞ்சும் அளவுக்குப் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா புறநகர்ப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் தீபக் நைட்ரைட் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திரைப்பட காட்சிகளை விஞ்சும் அளவுக்கு, விபத்தால் ஏற்பட்ட தீ வானளவுக்கு உயர்ந்து சென்றது. விபத்தில் ஏற்பட்ட தீயை பத்து கிலோமீட்டர் சுற்றளவிலிருந்தவர்களினால் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

ரசாயன தொழிற்சாலையில் தீ  விபத்து - குஜராத்
ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - குஜராத்

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த ஏழு தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்தப்பகுதியில் காற்றில் ரசாயனம் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசிக்கும் 700-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு மாற்றியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரித்த நாசமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். வெடிகுண்டு வெடிப்பதைப் போல் நிகழ்ந்த இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசாயன தொழிற்சாலையில் தீ  விபத்து - குஜராத்
ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - குஜராத்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மாநிலம் பருச்சில் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருந்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு மாத இடைவெளியில் குஜராத்தில் மீண்டும் ஒரு ரசாயன ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism