Published:Updated:

சென்னை: மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து; பேருந்து மீது விழுந்த பில்லர் கம்பி - நடந்தது என்ன?

மெட்ரோ விபத்து
News
மெட்ரோ விபத்து

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில், பில்லர் கம்பி பேருந்தின் மேல் விழுந்துள்ளது.

சென்னை: மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து; பேருந்து மீது விழுந்த பில்லர் கம்பி - நடந்தது என்ன?

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில், பில்லர் கம்பி பேருந்தின் மேல் விழுந்துள்ளது.

Published:Updated:
மெட்ரோ விபத்து
News
மெட்ரோ விபத்து

சென்னையின் பல்வேறு பகுதிகளால் மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இடங்களில், மெட்ரோ மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூண்கள் அமைப்பதற்கான கம்பிகள் வேறு இடங்களில் கட்டப்பட்டு, அமைக்கப்படும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டுவரப்படும். பின், அந்த குறிப்பிட்ட கட்டப்பட்ட கம்பிகள், கிரேன்களின் உதவியுடன் தூக்கி நிறுத்தி கான்கிரீட் போடப்படும்.

மெட்ரோ விபத்து
மெட்ரோ விபத்து

சென்னை ராமாபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் மெட்ரோ கட்டுமான பணியில், இன்று அதிகாலை 4 மணியளவில், லாரியிலிருந்த பில்லர் கம்பியை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த 30 அடி நீளமுள்ள பில்லர் கம்பி கீழே விழுந்தது.

கீழே விழுந்த கம்பி, குன்றத்தூரிலிருந்து ஆலந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது விழுந்தது. கம்பி விழுந்ததில், பேருந்தின் ஒருபகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும், அங்கிருந்த லாரி மீதும் விழுந்தது. இதில், அந்த பேருந்து ஓட்டுநர் அய்யாதுரை, பூபாலன், லாரி ஓட்டுநர் குமார் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மெட்ரோ விபத்து
மெட்ரோ விபத்து

காயமடைந்த மூவரும், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.