Published:Updated:

மும்பை: நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்; 9 பேர் பலியான சோகம்!

இடிந்து விழுந்த கட்டடம் - மீட்பு பணி

மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

மும்பை: நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்; 9 பேர் பலியான சோகம்!

மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
இடிந்து விழுந்த கட்டடம் - மீட்பு பணி

மும்பையில் நேற்று நள்ளிரவு திடீரென குர்லா நாயக் நகரில் இருந்த நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 20-க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர். நள்ளிரவில் விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணிகளைத் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினரும், போலீஸாரும், தேசிய பேரிடர் மேலாண்மைப் படையும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் ஒன்பது பேர் எந்தவிதக் காயமும் இன்றி மீட்கப்பட்டனர். இது தவிர இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் தெரிவித்தார்.

மீட்பு பணி
மீட்பு பணி

பல மணி நேரம் நடந்த மீட்புப் பணியில் மீட்கப்பட்ட ஆறு பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாநில அமைச்சர் சுபாஷ் தேசாய் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதோடு அமைச்சர் ஆதித்ய தாக்கரேவும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, ``மிகவும் மோசமாகப் பழுதடைந்த கட்டடங்களில் இருப்பவர்கள் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும். கட்டடங்களை ஆய்வுசெய்த பிறகு காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துவிட்டால் மக்கள் தாங்களாகவே வீட்டை காலி செய்ய வேண்டும். அவ்வாறு காலி செய்யாவிட்டால் இது போன்ற விபத்துகள் நடக்கும்" என்று தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகில் மேலும் நான்கு கட்டடங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டங்களைக் காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் மக்கள் வீட்டைக் காலி செய்யாமல் தொடர்ந்து அதில் வசித்துவந்தனர். இந்த நிலையில்தான், இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!