Published:Updated:

மகாராஷ்டிரா: சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரிக்கும் முயற்சி... பிளேடு தலையில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

மகாராஷ்டிராவில் சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரிக்க முயன்றவரின் தலையில் ஹெலிகாப்டர் பிளேடு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் அருகேயுள்ள புல்சவங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் ஷேக் (24) என்ற வாலிபர், சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காகப் பல இடங்களுக்குச் சென்று ஹெலிகாப்டர் தயாரிக்கத் தேவையான உதிரி பாகங்களை வாங்கி வந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹெலிகாப்டர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஹெலிகாப்டரைத் தயாரித்து முடித்திருந்தார். உடனே அனைத்து பாகங்களையும் பொருத்தி ஹெலிகாப்டரை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் சோதனை செய்தபோது ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருந்த பிளேடு ஒன்று கழன்று ஷேக் தலையில் விழுந்தது. இதில் ஷேக் படுகாயம் அடைந்தார்.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்துவந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். அவருக்கு ஹெலிகாப்டர் தயாரிக்க உதிரி பாகங்கள் எப்படிக் கிடைத்தன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது. எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் ஹெலிகாப்டர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாலேயே இது போன்ற விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு: ``போலீஸ் மீதுள்ள புகார் உட்பட  அனைத்தும் விசாரிக்கப்படும்" - ஐ.ஜி தகவல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு