Published:Updated:

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: பாலிவுட் நடிகை மலைகா அரோரா காயம்!

கார் விபத்து

மும்பை-புனே நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் பாலிவுட் நடிகை மலைகா அரோரா காயம் அடைந்தார்.

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: பாலிவுட் நடிகை மலைகா அரோரா காயம்!

மும்பை-புனே நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் பாலிவுட் நடிகை மலைகா அரோரா காயம் அடைந்தார்.

Published:Updated:
கார் விபத்து

பாலிவுட் நடிகை மலைகா அரோரா நேற்று புனேயில் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் மும்பையில் இருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் சென்றபோது மும்பையிலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் மலைகா அரோரா காருக்கு முன்னாள் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால் மலைகா காரும், அவரது காருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் மூன்று வாகனங்களில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். மலைகா அரோராவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலை பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். மலைகா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மலைகா அரோரா
மலைகா அரோரா

அவருக்கு லேசான காயமடைந்திருப்பதை அவர் சகோதரி அம்ரிதா அரோராவும் உறுதி செய்துள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அம்ரிதா தெரிவித்தார். இது குறித்து கொபோலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கொபோலி இன்ஸ்பெக்டர் ஹரேஷ் கூறுகையில், ``விபத்துக்குள்ளான மூன்று வாகனங்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எப்படி விபத்து நடந்தது என்பது குறித்தும், விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

மலைகா அரோராவிற்கு நடிகை சல்மான் கான் மகன் அர்பாஸ் கானுடன் திருமணம் நடந்தது. இருவரின் மண வாழ்க்கை 2017-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது மலைகா அரோரா அர்ஜூன் கபூர் என்பவரை காதலித்து வருகிறார். `சைய... சைய' என்ற பிரபலமான பாடலுக்கு ஷாருக் கானுடன் நடனமாடிய நடிகை மலைகா அரோரா விரைவில் குணமடைய வேண்டுவதாக பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism