Published:Updated:

`கட்டுப்பாட்டை இழந்த லாரி; எதிரே வந்த சொகுசுப் பேருந்து'- திருப்பூரில் 20 பேரை பலிகொண்ட கோர விபத்து

விபத்து
விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தடுப்புகளில் மோதி எதிர் வழித்தடத்துக்குச் சென்றுள்ளது. லாரியைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாததால், அது எதிரில் வந்த பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி சொகுசுப் பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. அதில் 48 பயணிகள் இருந்துள்ளனர். அதேபோல கேரளாவிலிருந்து டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு, ஓர் கன்டெய்னர் லாரி சேலம் நோக்கிச் சென்றுள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வந்துகொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

இதையடுத்து, காவல்துறை, தீயணைப்புத்துறை சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர், வண்டி ஓட்டும்போது கண் அயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் தடுப்புகளில் மோதி, எதிர் வழித்தடத்துக்குச் சென்றுள்ளது. லாரியைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாததால், அது எதிரில் வந்த பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

`எத்தனையோ விபத்துகளை கடந்திருக்கிறேன்.. ஆனால் இது கொடூரமானது!'- கமல்ஹாசன் #Indian2
விபத்து
விபத்து

லாரியில் அதிக எடை இருந்ததால், பேருந்தின் ஒரு பகுதியே நசுங்கிவிட்டது. கன்டெய்னரை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு