Published:Updated:

அதிவேகத்தில் வந்த கார்; நொடிப்பொழுதில் தூக்கியெறிப்பட்ட மாணவிகள்! - பதறவைக்கும் விபத்து #video

கார் விபத்து
கார் விபத்து

கேரளாவில் தறிகெட்டு வந்த கார் மோதி மாணவிகள் மூவரும் ஒன்றாகப் பறந்துசென்று விழுகின்றனர். ஆறு பேரை ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதித் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் பூச்சக்கலில் இன்று மதியம் 2 மணி அளவில் பள்ளியை முடித்துக்கொண்டு மூன்று மாணவிகள் சாலை ஓரமாக நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னே ஒரு மாணவி சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அதேபோல் சாலைக்கு அந்தப்புறமாக ஆண் ஒருவரும், அவருடைய குழந்தை ஒன்றும் பைக்கில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சாலையில் சைக்கிளில் வந்த மாணவிக்கு எதிர்ப்புறத்திலிருந்து வெள்ளை நிற கார் ஒன்று அதிவேகமாக வந்தது. முதலில் பைக்கில் இருந்த இருவர் மீது மோதிய கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவிகள் மூன்று பேர் மீது மோதியது. இதில் மூன்று மாணவிகளும் அந்தரத்தில் பறந்து சாலைக்கு அடுத்துள்ள காடுகளில் விழுந்துள்ளார்கள்.

விபத்து
விபத்து
manorama

அடுத்த சில நொடிகளில் அதேசாலையில் சைக்கிளில் வந்த மாணவி மீதும் கார் அதிவேகமாகமோத அவரும் தூக்கியெறியப்பட்டார். பின்னர், கார் மரம் ஒன்றில் மோதி நின்றது. அருகிலிருந்தவர்கள் இந்த விபத்தைப் பார்த்து உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் உட்பட அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பார்ப்பவர்கள் மனதைப் பதறவைக்கும் அளவுக்கு அதிவேகத்தில் அந்த கார் வருகிறது. கண்முன் தெரியாமல் தறிகெட்டு வந்த கார் மோதி மாணவிகள் மூவரும் ஒன்றாகப் பறந்துசென்று விழுகின்றனர். ஆறு பேரை ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதி தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

`பெற்றோர்களின் கதறலை எதிர்கொள்ளவே முடியலை!' - கலெக்டர்களைக் கலங்கவைத்த அவினாசி விபத்து

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகளும் விவரங்களும் கார் அதிவேகத்தில் வர என்ன காரணம் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பூச்சக்கல் பள்ளியில் படிக்கும் அந்த நான்கு மாணவிகளும், தேர்வு முடிந்ததும் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு மாணவிக்கு மூக்கு மற்றும் ஒரு தொடை பகுதிகளில் எலும்பு முறிந்துள்ளது. மற்றொரு மாணவிக்கு ஒரு தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இன்னொரு மாணவிக்கு இரண்டு கால்களும் முறிந்தன. நான்காவதாக அடிபட்ட மாணவிக்கு இடது முழங்கால் உடைந்துள்ளது. அதேநேரம் பைக்கில் இருந்த ஆண் மற்றும் அவரது நான்கு வயதுக் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து
விபத்து
manorama
தொழுதூர் டு மதுரை... விபத்து, கால் சிதைவு... ஒரு தாயின் உயிரைக் காக்க நடந்த ரியல் போராட்டம்!

கார் மரத்தில் மோதியதால் காரில் இருந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காரில் இருந்த இரண்டு பேரும் மனோஜ் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மனோஜ் காரை ஓட்டி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கார் எவ்வாறு கட்டுப்பாட்டை மீறி பல நபர்களைத் தாக்கியது என்பதை அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ``டிரைவர் குடிபோதையில் இருந்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றன. எனினும் நாங்கள் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு