Published:Updated:

அசுர வேகம்; மேம்பாலத்தை உடைத்து பறந்த கார்- குலைநடுங்க வைக்கும் வீடியோ!

கீழே விழுந்த கார் அங்கு நின்றிருந்த ஆட்கள் மீதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீதும் பெரிய சத்தத்துடன் உருண்டு விழுந்தது.

கார்
கார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கச்சிபோலி பகுதியில் வாகன நெருக்கத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் ஃபயோடைவர்சிட்டி ஃப்ளை ஓவர் என்ற பெயரில் புதிய மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்தப் பாலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் ஃபயோடைவர்சிட்டி பாலத்தில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

அசுர வேகம்; மேம்பாலத்தை உடைத்து பறந்த கார்- குலைநடுங்க வைக்கும் வீடியோ!

அப்போது அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்த சிவப்பு கலர் கார் ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை மீறி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு மேல் இருந்து கீழே பறந்தது. இதில் கீழே விழுந்த கார் அங்கு நின்றிருந்த ஆட்கள் மீதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீதும் பெரிய சத்தத்துடன் உருண்டு விழுந்தது.

அதிர்ச்சியான இந்த விபத்தில் ஆட்டோவுக்காக நின்றுகொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க சத்தியவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் உயிரிழந்த சத்தியவதியின் மருமகள் மற்றும் காரில் இருந்த பிரணிதா, பால்ராஜ் குபேர் என மொத்தம் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அசுர வேகம்; மேம்பாலத்தை உடைத்து பறந்த கார்- குலைநடுங்க வைக்கும் வீடியோ!

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, விபத்து குறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதில் உள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விபத்தை அடுத்து மேம்பாலத்தை உடனடியாக மூட உத்தரவிட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திய பின் மேம்பாலத்தை திறக்க வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.