Published:Updated:

ஹெல்மெட்டுக்குள் வெடித்த செல்போன்! - கிருஷ்ணகிரி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

எம்.வடிவேல்

கிருஷ்ணகிரியில் செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம்.

காயமடைந்த இளைஞர்
காயமடைந்த இளைஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் டூ வீலர் பயணத்தின்போது ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துப் பேசிக்கொண்டு சென்றபோது, செல்போன் வெடித்தது.

வெடித்த செல்போன்
வெடித்த செல்போன்

இதில் செல்போன் பேசிச் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதைப்பார்த்த பொதுமக்கள், ஆறுமுகம் என்ற அந்த இளைஞரைக் காப்பாற்றி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி போலீஸார், அந்த நபரை மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் செல்போன் பயன்படுத்துவோர் இடையே பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.