Published:Updated:

கர்நாடகாவில் சக்கரத்தின் அச்சு முறிந்து, தேர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!

கவிழ்ந்த வீரபத்ரேஸ்வரர் சுவாமி கோயில் தேர்.

ஊர் மக்கள் விரைந்து செயல்பட்டு தேரைத் தூக்கி நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பக்தர்கள் உயிர் தப்பினர்.

கர்நாடகாவில் சக்கரத்தின் அச்சு முறிந்து, தேர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!

ஊர் மக்கள் விரைந்து செயல்பட்டு தேரைத் தூக்கி நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பக்தர்கள் உயிர் தப்பினர்.

Published:Updated:
கவிழ்ந்த வீரபத்ரேஸ்வரர் சுவாமி கோயில் தேர்.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரம் மாவட்டத்திலுள்ள சென்னப்பன்புரம் கிராமம், தமிழக எல்லையான தாளவாடியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்திலுள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா ரத்துசெய்யப்பட்டு பூஜைகள் மட்டுமே நடைபெற்றன.

தேர் கவிழ்வதால் சிதறி ஓடும் பக்தர்கள்.
தேர் கவிழ்வதால் சிதறி ஓடும் பக்தர்கள்.

அதனால் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட முடிவுசெய்யப்பட்டு நேற்று காலையில் தேர்த்திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

முதலில் கோயிலைச் சுற்றி தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களால் இழுத்துவரப்பட்ட தேர், சிறிது தூரம் ஓடிய பிறகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. தேர் கவிழ்ந்ததைப் பார்த்த பக்தர்கள் சிதறி ஓடித் தப்பினர். இருப்பினும், தேருக்கு அடியில் ஐந்து பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, கீழே கவிழ்ந்த தேரைத் தூக்கி நிறுத்தினர். அப்போதுதான் தேரின் ஒரு சக்கரம் உடைந்துபோனது தெரியவந்தது.

அச்சு முறிந்த தேர்ச் சக்கரம்.
அச்சு முறிந்த தேர்ச் சக்கரம்.

தேரின் இடிபாடுகளில் சிக்கிய ஐந்து பேரும் மீட்கப்பட்டு சாம்ராஜ்நகரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஊர் மக்கள் விரைந்து செயல்பட்டு தேரைத் தூக்கி நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பக்தர்கள் உயிர் தப்பினர்.

நீண்ட நாள்களாக நிலை நிறுத்தப்பட்ட தேரின் சக்கரங்கள் முறையாகப் பராமரிக்காததால்தான் சக்கரத்தின் அச்சு முறிந்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நேரிடாமல் தங்களை வீரபத்ரேஸ்வர சுவாமி காப்பாற்றிவிட்டதாக அந்தக் கிராம பக்தர்கள் நிம்மதி தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்திருக்கும் சாம்ராஜ் நகரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.