Published:Updated:

சென்னை: பைக்கிலிருந்து தவறி விழுந்த மாநகராட்சிப் பெண் ஊழியர்... உயிரைப் பறித்த பேருந்து!

மாநகராட்சிப் பெண் ஊழியர் வைஷாலி
மாநகராட்சிப் பெண் ஊழியர் வைஷாலி

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற சென்னை மாநகராட்சிப் பெண் ஊழியர், திடீரென கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பேருந்தின் டயரில் சிக்கிய அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. அதனால் மின்சார ரயில் மூலம் பணிக்குச் சென்று வந்த பலர், இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் சென்றுவருகின்றனர். அதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிச் சாலைகளில் டூவிலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டுவருகிறது. அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் பேருந்துகளும், மெட்ரோ ரயிலும் காலியாகவே செல்கின்றன.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

இந்தநிலையில் டூவிலரில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சென்னை மாநகராட்சிப் பெண் ஊழியர் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

அது குறித்த விவரம்: சென்னை, தாம்பரத்தை அடுத்த வாலாஜாபாத் ஆறுமுகபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வைஷாலி(25). இவர், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பூங்கா பராமரிப்பு பணியாளராக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள்.

இந்தநிலையில் வைஷாலி, வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து பைக்கில் தாம்பரம் வந்தார். பின்னர் பேருந்து மூலம் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அதன் பிறகு மெட்ரோ ரயிலில் மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்குச் சென்றுள்ளார். பணி முடிந்து மெட்ரோ ரயிலில் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அதன் பிறகு நண்பர் ஒருவர் பைக்கில் பின்னால் அமர்ந்து தாம்பரத்துக்குச் சென்றார்.

சென்னை: `பிரச்னை இல்லாத உலகத்துக்குச் செல்கிறேன்!' -  துப்பாக்கியால் சுட்டு அதிகாரி  தற்கொலை
விபத்து
விபத்து
representational image

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்தபோது பைக்கை ஓட்டியவர் திடீரென நிலைத்தடுமாறியிருக்கிறார். அதனால், பின்னால் அமர்ந்திருந்த வைஷாலி நடுரோட்டில் விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்தின் டயர், வைஷாலியின் தலைமீது ஏறி இறங்கியது. அதனால் தலை நசுங்கிய வைஷாலி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வைஷாலியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு