Published:Updated:

`அதிவேக ஆட்டோ; உரசிய கன்டெய்னர் லாரி!’- அதிகாலை ரேஸால் உயிரிழந்த சென்னை மெக்கானிக்

பிரபாகரன் ஓட்டிச்சென்ற ஆட்டோ ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ ரேஸ்
ஆட்டோ ரேஸ்

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்துவந்தவர் மெக்கானிக் பிரபாகரன். நேற்று இருசக்கர வானத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர் சக நண்பர்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

விபத்து
விபத்து

இந்தவிபத்து தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட, காவலர்கள் பிரபாகரனின் நண்பர்களிடம் விசாரணையைத் தொடங்கினர். அப்போது உடன் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்ல, போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

Vikatan

உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், விபத்துக்கு காரணம் `ஆட்டோ ரேஸ்' என்பதைக் கண்டுபிடித்தனர். சென்னை போரூர் அருகே தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸ் நடப்பது வழக்கம். இதுதொடர்பாகப் பலமுறை போலீஸார் எச்சரிக்கைவிடுத்தும், இது தொடர்கதையாகி வந்தது.

`அதிவேக ஆட்டோ; உரசிய கன்டெய்னர் லாரி!’- அதிகாலை ரேஸால் உயிரிழந்த சென்னை மெக்கானிக்

மெக்கானிக்கான பிரபாகரன் ஆட்டோ ரேஸுக்கு ஆட்டோக்களை தயார் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிகாலை நேரத்தில் தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பந்தயத்தைக் கண்காணிக்கும் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனங்களில் சாலையில் பறந்துள்ளனர்.

அவர்களில் சிலர் இந்த ஆட்டோ ரேஸ் தொடர்பாக வீடியோவும் எடுத்துள்ளனர். அப்போதுதான் பிரபாகரன் ஓட்டிச்சென்ற ஆட்டோ ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளும் கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டது தெரியக் கூடாது என்பதற்காக இருசக்கர வாகன விபத்து என பொய் சொல்லி மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது.

ஆட்டோ ரேஸ்
ஆட்டோ ரேஸ்

இதைத்தொடர்ந்து பிரபாகரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட மற்ற நபர்களைத் தேடிவருகின்றனர்.

`அதிவேக ஆட்டோ; கன்டெய்னர் லாரி!’- அதிகாலை ஆட்டோ ரேஸில் பறிபோன மெக்கானிக் உயிர்

Posted by Junior Vikatan on Thursday, November 14, 2019