Published:Updated:

சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி - சுதந்திர தின விழா முடிந்து திரும்பும்போது நடந்த சோகம்

பள்ளி மாணவி அரசுப் பேருந்து மோதி பலி

சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவர் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி - சுதந்திர தின விழா முடிந்து திரும்பும்போது நடந்த சோகம்

சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவர் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

Published:Updated:
பள்ளி மாணவி அரசுப் பேருந்து மோதி பலி

சென்னை அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஸ்ரீ. இவர் குரோம்பேட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவி இன்று பள்ளியில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவிட்டு தனது சைக்கிளில் ராஜேந்திர பிரசாத் சாலையில் தனது தோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து மாணவி மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

பள்ளி மாணவி அரசுப் பேருந்து மோதி பலி
பள்ளி மாணவி அரசுப் பேருந்து மோதி பலி

சம்பவமறிந்து வந்த போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், அந்தப் பேருந்து ஓட்டுநர், தேவகுமார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடச் சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.