Published:Updated:

`தாசில்தாரைக் காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட டிரைவர்' - சென்னையில் நிகழ்ந்த சோகம்

விபத்து
விபத்து

சென்னையில், தாசில்தாரை அழைத்துக்கொண்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிரைவர் மரணமடைந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் தாசில்தார் பிழைத்துக்கொண்டார்.

சென்னையை அடுத்த சேலையூர் அம்பிகா நகரிலிருந்து மாடம்பாக்கம் பிரதான சாலை வழியாக ராஜ கீழ்ப்பாக்கம் செல்லும் சாலையில் அரசு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் தாசில்தார் ராம்குமார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். வாகனத்தை அசோக் நகரைச் சேர்ந்த சந்தீப் (40) ஓட்டினார்.

ஊரடங்கு
ஊரடங்கு
`மிரட்டல் புகார்; திடீர் விபத்து!’ - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர்?

ஊரடங்கு காரணமாக சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சமயத்தில் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் என்ன நடக்கிறது என்று தாசில்தார் ராம்குமார் சுதாரிப்பதற்குள், ராஜ கீழ்ப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்ம் மீது வாகனம் மோதியது. இதில் டிரைவர் சந்தீப் படுகாயமடைந்தார். தாசில்தார் ராம்குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

24,000 ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்படும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #CoronaUpdate #NowAtVikatan

பின்னர், டிரைவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், டிரைவர் சந்தீப் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டைக்கும் கொண்டுசென்றனர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்து
விபத்து

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்புப் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் கலெக்டர் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிவரும் தாசில்தார் ராம்குமார், கிண்டி தாசில்தாரின் வாகனத்தில் இன்று சென்றுகொண்டிருந்தார். அந்த வாகனத்தை ஒட்டிய சந்தீப்பிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இருப்பினும் விபத்து ஏற்படுத்துவதைத் தவிர்க்க வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போதுதான் அந்தப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வாகனம் மோதி நின்றுள்ளது. இருப்பினும் சந்தீப் மரணமடைந்துவிட்டார். வேகத்தைக் குறைத்து மெதுவாக மோதியதில் தாசில்தார் ராம்குமார் உயிர்பிழைத்துவிட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் சந்தீப் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு