Published:Updated:

தீபாவளிக்குப் பின் ஊர்திரும்பிய இளைஞர்... விபத்தில் கடமானுடன் பலியான சோகம்!

கோவை, ஆழியாறு அருகே கடமான் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் வாகன ஓட்டி மற்றும் கடமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
விபத்து

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (29). இவர் தன் நண்பர் முத்துக்குமார் என்பவருடன் தீபாவளி விடுமுறைக்காக இருசக்கர வாகனத்தில் வால்பாறை சென்றுள்ளார். பின்னர, நேற்று (செவ்வாய்க்கிழமை) வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு இருவரும் திரும்பியுள்ளனர்.

கடமான்
கடமான்

இந்நிலையில் வாகனம், ஆழியாறு குரங்கு அருவி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக ஓர் கடமான் சாலையைக் கடக்க முயன்றது.

அதிவேகத்தில் வந்த ஆட்டோ, லாரி - 6 பேரின் உயிரைப் பலிகொண்ட சாலை விபத்து

எதிர்பாராதவிதமாக, காளீஸ்வரன் வந்த இருசக்கர வாகனம் கடமான் மீது மோதியது. இதில், கடமான் தூக்கி வீசப்பட்டது. அதேபோல, காளீஸ்வரனும் தூக்கி வீசப்பட்டார். தலை, இடது தோள்பட்டை, இடது கால் ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்ட காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

உயிருக்குப் போராடி வந்த மானை காப்பாற்ற, வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டது. காளீஸ்வரனுடன் வந்த முத்துக்குமார் காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆழியாறு போலீஸாரும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடமான்
கடமான்

“வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில், மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.