Published:Updated:

விருதுநகர்: பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்... தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி!

மாதேஸ்வரன்

"கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூடப் பள்ளி மாணவி ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது".

விருதுநகர்: பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்... தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி!

"கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூடப் பள்ளி மாணவி ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது".

Published:Updated:
மாதேஸ்வரன்

அருப்புக்கோட்டை அருகேயுள்ள வெள்ளையாபுரம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவருடைய மகன் மாதேஸ்வரன் (வயது 19). இவர் விருதுநகரிலுள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வேதியியல் படித்துவந்தார். இந்த நிலையில் மாதேஸ்வரன் கல்லூரிக்குச் செல்வதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து அரசு நகரப் பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாறு மாதேஸ்வரன் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மாதேஸ்வரன்
மாதேஸ்வரன்

பாலவநத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது படியில் தொங்கியவாறு பயணம் செய்த மாதேஸ்வரன் திடீரெனத் தவறி விழுந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மாதேஸ்வரன் அதிக ரத்தக்கசிவு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்த தகவல் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த மாணவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கல்லூரிக்குப் பேருந்தில் வந்த மாணவர் ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பஸ் பயணிகள் பேசுகையில், "காலை, மாலை இரு நேரங்களிலும் பள்ளி, கல்லூரிகள் முடியும் நேரத்திலும் அருப்புக்கோட்டையிலிருந்து மற்ற ஊர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் படியில் தொங்கியவாறே உயிரைப் பணயம்வைத்து பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட பள்ளி மாணவி ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது.

அதற்குக் காரணமும் மாணவர்கள் செல்ல குறிப்பிட்ட அந்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததுதான். இந்த நிலையில் இரண்டாவது சம்பவமாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவர், பேருந்துப் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து இறந்திருப்பது வருத்தத்துக்குரிய ஒன்று. எனவே, பிரச்னை என்னவென்பதை அறிந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.