Published:Updated:

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்! - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தம்பதியை மீட்ட, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரின் இந்தச் செயலைப்பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் விஜயபாஸ்கர்
பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக, விமான நிலையத்துக்குப் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

 முதலுதவி அளிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்
முதலுதவி அளிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்
வெங்கடேஷ்.ஆர்

கார் கீரனூர் அருகே இளையாவயல் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு சாலை விபத்தில் சகாயராஜ்-மேரி தம்பதி சிக்கியதை கண்டார். சகாயராஜுக்கு கையில் காயத்துடன் தப்பினார். மேரிக்கு மூக்கில் ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் உடனே தனது காரை நிறுத்தினார்.

காரை விட்டு வேகமாகக் கீழே இறங்கிச் சென்று காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த மேரி மற்றும் சகாயராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், உடனே தனது பாதுகாப்பு வாகனத்தில் அந்தத் தம்பதியை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விஜயபாஸ்கர் முதலுதவி
விஜயபாஸ்கர் முதலுதவி

தொடர்ந்து, கீரனூர் அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்த அமைச்சர், அந்தத் தம்பதிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்தார். அமைச்சரின் இந்தச் செயலை அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.