Published:Updated:

`மிரண்டு ஓடிய மாடுகள்; கிணற்றில் விழுந்த விவசாயி!’ - 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு

மாட்டுவண்டியுடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி

ஒட்டன்சத்திரம் அருகே மாட்டுவண்டியுடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியையும், இரண்டு மாடுகளையும் ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர்.

`மிரண்டு ஓடிய மாடுகள்; கிணற்றில் விழுந்த விவசாயி!’ - 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே மாட்டுவண்டியுடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியையும், இரண்டு மாடுகளையும் ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர்.

Published:Updated:
மாட்டுவண்டியுடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள, காவேரியம்மாபட்டி பக்கத்திலுள்ள தரிசுத் தோட்டத்து சாலையில் வசித்துவருபவர் விவசாயி கருப்பணன் (60). இவர், தனது தோட்டத்தில் வெட்டிவைத்திருந்த குச்சிகளைக் கொண்டு செல்வதற்காக தோட்டத்திலிருந்த மாட்டுவண்டியைக் கொண்டுசென்றிருக்கிறார்.

அப்போது தோட்டத்துக்கு அருகே சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவர் இல்லாத 60 அடி ஆழக் கிணற்றுக்குள் மாட்டுவண்டியுடன் கருப்பணன் கவிழ்ந்துவிட்டார். அருகிலிருந்தவர்கள் வந்து அவரை மீட்பதற்கு முயல்வதற்குள் இரண்டு மாடுகள், வண்டியுடன் கருப்பணன் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்.

கருப்பணன்
கருப்பணன்

பின்னர் இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறை, காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் சிவக்குமார் தலைமையிலான ஆறு பேர்கொண்ட தீயணைப்புக் குழுவினர், இரண்டு ஜேசிபி, இரண்டு கிரேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விவசாயி கருப்பணனையும், இரண்டு மாடுகளையும் சடலமாக மீட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாட்டுவண்டியுடன் விவசாயி கிணற்றில் விழுந்தது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்களிடம் விசாரித்தோம். அவர்கள், ``வண்டியை இழுப்பதற்கு பழக்கப்படாத மாடுகள் என்பதால் தோட்டத்திலிருந்து கருப்பணன் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாடுகள் மிரண்டுபோய் தறிகெட்டு ஓடியிருக்கின்றன. கருப்பணனால் மாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கருப்பணன் சடலமாக மீட்பு
கருப்பணன் சடலமாக மீட்பு

அந்தப் பகுதியில் சாலையை ஒட்டியிருக்கும் 60 அடி ஆழம்கொண்ட தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றில் மாட்டுவண்டி கவிழ்ந்திருக்கிறது. கிணற்றில் 30 அடி வரை தண்ணீர் நிரம்பியிருப்பதால் விழுந்தவுடன் வண்டி மாடுகளுடன் சேர்ந்து கருப்பணனும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார். கருப்பணனையும் மாடுகளையும் உயிருடன் மீட்க முடியாமல் போனது கவலையளிக்கிறது” என்றனர்.