Published:Updated:

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்... காயமடைந்த தீயணைப்பு வீரர்கள்!

காயமடைந்த தீயணைப்பு வீரர்

பெரிய சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டருக்கு காஸை மாற்றும்போது சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது.

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்... காயமடைந்த தீயணைப்பு வீரர்கள்!

பெரிய சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டருக்கு காஸை மாற்றும்போது சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது.

Published:Updated:
காயமடைந்த தீயணைப்பு வீரர்

திருச்சி நீதிமன்றம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் பணிபுரிந்துவருகின்றனர். நேற்று வழக்கம்போல தீயணைப்பு நிலையத்தில் வேலைகள் நடைபெற்று வந்தபோது, தீயணைப்பு வீரர்களான பிரசாந்த் (27), சரவணன் (44) ஆகிய இருவரும் பெரிய மெயின் சிலிண்டரிலிருந்து, 3 கிலோ சிலிண்டரில் ஆக்சிஜனை நிரப்பிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது 3 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் படுகாயமடைய, சரவணக்குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

வெடித்துச் சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்
வெடித்துச் சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்

அதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீதிமன்ற போலீஸார் காயமடைந்த பிரசாத், சரவணக்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். விசாரணையில், பெரிய சிலிண்டரிலிருந்து 3 கிலோ சிலிண்டரில் கொள்ளளவை மீறி ஆக்சிஜனை நிரப்பியதே சிலிண்டர் வெடித்ததற்குக் காரணம் எனத் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்சிஜன் சிலிண்டரை, தீ விபத்து மீட்புப் பணிகளின்போது தீயணைப்பு வீரர்கள் சுவாசிப்பதற்காகப் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு நிலையத்திலேயே சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.