Published:Updated:

`கிருஷ்ஷ்ணா...!?' கதறிய கமல்! இந்தியன்-2 விபத்தும், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி திக்திக் பின்னணியும்

இந்தியன்-2, கமல்

மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு… கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?’ எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார்.

`கிருஷ்ஷ்ணா...!?' கதறிய கமல்! இந்தியன்-2 விபத்தும், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி திக்திக் பின்னணியும்

மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு… கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?’ எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார்.

Published:Updated:
இந்தியன்-2, கமல்

`இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் படக்குழுவை நிலைகுலையச் செய்துள்ளது. ``எத்தனையோ விபத்துகளைக் கடந்திருந்தாலும் இந்த விபத்து கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்” எனத் தன்னுடைய வேதனையை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல்.

2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே `இந்தியன்-2’ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. விரைவில் படப்பிடிப்பு முடிய வேண்டும் என்பதால் இரவு நேரங்களில் பகல் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் படப்பிடிப்பில் அந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது.

ராட்சத கிரேன்
ராட்சத கிரேன்

பகலான இரவு... பலியான திரைக்கலைஞர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னர்கள் கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுபோல காட்சியை எடுப்பதற்காக, சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. பகலில் நடைபெறுவது போன்ற காட்சிகள், இரவில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதால் மைதானத்தைச் சுற்றிலும் ராட்சத கிரேன்களில் லைட் செட்டப் செய்திருந்தார்கள். கமல், ஷங்கர் உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் படப்பிடிப்பில் இருந்தனர். இரவு உணவு இடைவேளைக்காகத் தற்காலிகமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. உணவு இடைவேளை முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். உதவி இயக்குநர் கிருஷ்ணா, உணவு உபசரிப்பு பிரிவைச் சேர்ந்த சந்திரன், மது உள்ளிட்ட பலர் அங்கே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கிரேன் ஆபரேட்டர் லைட் செட்டப்புக்காக ராட்சத கிரேனை இயக்கியுள்ளார். கிரேன் ஆபரேட்டர் சரியாக இயக்காத காரணத்தால் ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடக்கும்போது கமல், ஷங்கர் ஆகியோர் சற்று தொலைவிலிருந்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிருஷ்ணா எங்கே... கதறியழுத கமல்!

சம்பவ இடத்தில் இருவர் உயிரிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு… கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?’ எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். கிருஷ்ணா இறந்துவிட்டார் என அருகிலிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டதும் அங்கேயே கதறி அழுதிருக்கிறார் கமல். ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது மற்றும் சந்திரன் (உணவு உபசரிப்பு பிரிவு) ஆகிய மூவர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மன்சாங், வாசு, ரம்ஸான், அனுபிரசாத், குமார், கலைச்சித்ரா, குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் ஆகிய 9 பேர் தண்டலம் பகுதியில் உள்ள சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பின்போது இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

கமல் ட்வீட்
கமல் ட்வீட்

தீம்பார்க் டு பிலிம் சிட்டி!

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகே `ஈ.வி.பி வேர்ல்ட்’ என்னும் தீம் பார்க்காகச் செயல்பட்டு வந்தது தற்போது விபத்து நடந்திருக்கும் இடம். 2012-ம் ஆண்டில் அபியா மேக் என்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் நண்பர்களுடன் ராட்சத ராட்டினத்தில் சுற்றும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உரிமையாளர் பெருமாள், அவரின் மகன் மற்றும் தீம் பார்க் ஊழியர்கள் மூவர் என ஐந்து பேர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து காரணமாகத் தீம் பார்க் உரிமையாளருக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால், சில காலம் தீம் பார்க்கை மூடியே வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தீம் பார்க் நடத்துவதைக் கைவிட்டு படப்படிப்புத் தளமாக மாற்றினார் பெருமாள். ஆரம்ப காலத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே இங்கே எடுக்கப்பட்டன. பிறகு ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்தின் சில காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன. மேலும் காலா, பிகில் உள்ளிட்ட திரைப்படக் காட்சிகளும் இந்த பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாகத் தொலைக்காட்சித் தொடர்கள், கலைநிகழ்ச்சிகள் என விறுவிறுப்பாகவே இருக்கிறது ஈ.வி.பி பிலிம் சிட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism