Published:Updated:

``என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்!” - மருத்துவர் ரமேஷ் உருக்கம்

டாஸ்மாக் கடைக்கு எதிராக மருத்துவர் ரமேஷ் கோவை மாவட்ட் ஆட்சியரிடம் மனு ( தி.விஜய் )

விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்த டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர்களால் ஏராளமான விபத்துகள் நடக்கிறது என்பது ஜம்புகண்டி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.

``என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்!” - மருத்துவர் ரமேஷ் உருக்கம்

விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்த டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர்களால் ஏராளமான விபத்துகள் நடக்கிறது என்பது ஜம்புகண்டி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.

Published:Updated:
டாஸ்மாக் கடைக்கு எதிராக மருத்துவர் ரமேஷ் கோவை மாவட்ட் ஆட்சியரிடம் மனு ( தி.விஜய் )

கடந்த 24-ம் தேதி, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி பகுதியில்  நடந்த இருசக்கர வாகன விபத்தில்,  கோவை மருத்துவரும் சமூக ஆர்வலருமான ரமேஷின் மனைவி ஷோபனா, சம்பவ இடத்திலேயே பலியானார்.   ஆனைக்கட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் தன் மகள் சாந்தலாவை பள்ளியிலிருந்து  வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதுதான் ஷோபனாவுக்கு இந்தத் துயர முடிவு ஏற்பட்டது. பலத்த காயங்களோடு அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய அவருடைய மகள் சாந்தலா, மருத்துவமனையில்  சிகிச்சைபெற்றுவருகிறார். 

மனைவியின் சடலத்தோடு டாஸ்மாக்கிற்கு எதிராக மருத்துவர் ரமேஷ் போராட்டம் நடத்தியபோது
மனைவியின் சடலத்தோடு டாஸ்மாக்கிற்கு எதிராக மருத்துவர் ரமேஷ் போராட்டம் நடத்தியபோது
தி.விஜய்

விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்த டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர்களால் ஏராளமான  விபத்துகள் நடக்கிறது என்பது ஜம்புகண்டி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.  சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி,  ஜம்புகண்டி மக்கள் போராடிவருகிறார்கள். ஆனால்,  அரசின் காதுகளுக்கு அந்த மக்களின் குரல் கேட்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஷோபனா விபத்துக்குள்ளானார்.  விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் ரமேஷிடம்,  ‘விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் போதையில் இருந்திருக்கிறார்கள் என்றும்  அவர்கள் அருகில் உள்ள  டாஸ்மாக் கடையில்தான் குடித்திருக்கிறார்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்குள்ள டாஸ்மாக்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று வெடிக்க, உயிருக்குப் போராடும் தனது மகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் மனைவி சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடினார் மருத்துவர் ரமேஷ். கூடங்குளம், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எனத் தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் தனது ஆத்மார்த்தமான பங்களிப்பைக் கொடுத்துள்ள மருத்துவர் ரமேஷ், தனது மனைவியின் நிலை இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடத்திய போராட்டம், தமிழக அளவில் பேசப்பட்டது.

மருத்துவர் ரமேஷ் கோவை கலெக்டரிடம் மனுகொடுக்க வந்தபோது
மருத்துவர் ரமேஷ் கோவை கலெக்டரிடம் மனுகொடுக்க வந்தபோது
தி.விஜய்

‘விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும். நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரையும் அனுப்பப்படும். அவர் ஏற்றுக்கொண்டால் நிரந்தரமாக மூடப்படும்’ என்று கோவை வடக்கு தாசில்தார் உறுதியளித்த பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் ரமேஷ். இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட கலெக்டரிடம் அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ரமேஷ் மனு கொடுத்தார். அவருக்கு ஆதரவாக, தி.மு.க பகுதி கழக செயலாளர் பையா கவுண்டர், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,வி.சி.க மண்டல செயலாளர் சுசி கலையரசன், சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் சிவஞானம், திராவிட தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி உள்ளிட்ட பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவர் ரமேஷ், “சென்னை போன்ற பெருநகரங்களிலும், மாவட்டத் தலை நகரங்களிலும், சாகசம் செய்கிறேன் என்கிற பெயரில் இளைஞர்கள் மது அருந்துவிட்டு கண் மூடித்தனமாக வாகனங்களை இயக்குகிறார்கள். அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான அந்த மோசமான கலாசாரம், இப்போது கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால், சாலைகளில் பயணம்செய்வது பாதுகாப்பில்லாததாக மாறி, விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. போதையால் இளைஞர் சமுதாயமும் சீரழிந்துவருகிறது. கேரளாவைப் போல் இங்கும் மது விற்பனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சாலையோரங்களில் விபத்து ஏற்படக் காரணமாக இருக்கும் டாஸ்மாக்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜம்புகண்டியில் உள்ள டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். அதற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்” என்றார்.

மதுக்கடை வேண்டும் என்று மனு கொடுக்க வந்தவர்கள்.
மதுக்கடை வேண்டும் என்று மனு கொடுக்க வந்தவர்கள்.
தி.விஜய்

மருத்துவர் ரமேஷ், அந்த டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று மனு கொடுத்துவிட்டுச் சென்ற அடுத்த சில நிமிடங்களில் ஜம்புகண்டி பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த டாஸ்மாக்கை மூடக் கூடாது என்று மனு கொடுக்க வந்தார்கள். ஏன் மூடக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, யாராலும் பதில் சொல்ல முடியாமல் திணறினர். அவர்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. பின்பு, பதில் சொல்வதற்காக ஒருவரை அழைத்துவந்து பேசவைத்தனர்.“தடாகம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிவந்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பவர்கள்தான் டாஸ்மாக் கடை வேண்டாம் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அந்தக் கடை மூடபட்டால், சாராயப் புழக்கம் ஏற்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism