Published:Updated:

`4 அறுவைசிகிச்சை;3 நாள் தீவிரகண்காணிப்பு'-அதிமுக கொடி விபத்தில் காலிழந்த அனுராதா எப்படி இருக்கிறார்?

அனுராதா
News
அனுராதா

அனுராதாவின் விபத்துக்கும் அ.தி.மு.க கொடிக்கும் சம்பந்தமில்லை என்று போலீஸார் கூறிவருகின்றனர். மேலும், லாரி டிரைவர் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் என்று அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜலட்சுமி என்கின்ற அனுராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூராக இருந்த அ.தி.மு.க கட்சியின் கொடிக் கம்பம் சரிந்ததால், வேகமாக பிரேக் போட முயற்சி செய்துள்ளார். இதனால், அவரின் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அதே நேரத்தில், அந்த வழியாக வந்த லாரி ஒன்று அனுராதாவின் கால்கள் மீது ஏறியது. இதில் அனுராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன.

அனுராதா
அனுராதா

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனுராதா. ஆனால், அனுராதாவின் விபத்துக்கும் அ.தி.மு.க கொடிக்கும் சம்பந்தமில்லை என்று போலீஸார் கூறிவருகின்றனர். மேலும், லாரி டிரைவர் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் என்று அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, இந்த விபத்து குறித்து பேசிய முதல்வர் பழனிசாமியும் அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்துவரும் அனுராதாவுக்கு சிகிச்சை அளிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த ஐந்து நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இரண்டு கால்களுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இடதுகாலில் சீல் படிந்து, அழுக ஆரம்பித்தது.

விபத்தை ஏற்படுத்திய லாரி
விபத்தை ஏற்படுத்திய லாரி

அது உயிருக்கே ஆபத்து என்பதால் இடது காலை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். நாகானந்தன் மற்றும் சித்ரா தம்பதியருக்கு ஒரே மகள் அனுராதா. பிபிஏ பட்டதாரியான இவர் இதற்குமுன்பு சிங்காநல்லூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். சில தினங்களுக்கும் முன்புதான் கோவையில் குடியேறியுள்ளார். அனுராதா அந்தப் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்புதான் அக்கெளன்ட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இவரது குடும்பத்தினர் விபத்தால் அனுராதாவுக்கு நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்குப் போதிய பணம் இல்லாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. அனுராதா இன்னும் சுயநினைவுக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசினோம். இதுதொடர்பாக அனுராதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கிருஷ்ணானந்தா, ``ரத்தநாளம் பாதிக்கப்பட்டதால் இடதுகாலைக் காப்பாற்ற முடியவில்லை.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க காலைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அனுராதாவுக்கு இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக, வலது காலில் எலும்பு முறிவு உள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அடுத்த 72 மணி நேரம் வரை அவருக்கு தீவிரக் கண்காணிப்பு தேவைப்படலாம்'' என்றார்.