Published:Updated:

திருவள்ளூர்: தீப்பிடித்த எலெக்ட்ரிக் பைக்... பற்றியெரிந்த வீடு - உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

தீ விபத்து - எலெக்ட்ரிக் பைக் ( சித்தரிப்புப் படம் )

எலெக்ட்ரிக் பைக் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்குக்கும் தீ பரவியது. அந்த பெட்ரோல் பைக் வெடித்ததில் அவர்களின் வீட்டின் முன்பகுதியில் தீ பற்றிக்கொண்டது.

திருவள்ளூர்: தீப்பிடித்த எலெக்ட்ரிக் பைக்... பற்றியெரிந்த வீடு - உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

எலெக்ட்ரிக் பைக் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்குக்கும் தீ பரவியது. அந்த பெட்ரோல் பைக் வெடித்ததில் அவர்களின் வீட்டின் முன்பகுதியில் தீ பற்றிக்கொண்டது.

Published:Updated:
தீ விபத்து - எலெக்ட்ரிக் பைக் ( சித்தரிப்புப் படம் )

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). விவசாயத் தொழில் செய்துவரும் இவருக்குத் தேன்மொழி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியிருந்தார். நேற்று அவரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ விபத்து - எலெக்ட்ரிக் பைக்
தீ விபத்து - எலெக்ட்ரிக் பைக்
சித்தரிப்புப் படம்

எலெக்ட்ரிக் பைக் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்குக்கும் தீ பரவியது. அந்த பெட்ரோல் பைக் வெடித்ததில் அவர்களின் வீட்டின் முன்பகுதியில் தீ பற்றிக்கொண்டது. புகை வருவதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக வீட்டின் பின்வாசல் வழியாகத் தப்பித்துவிட்டனர். வீட்டில் தீ பற்றியதில் குளிர்சாதனப் பெட்டி முதல் மின் மோட்டார் வரை எரிந்து நாசமாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறையினர், எரிந்துகொண்டிருந்த வாகனங்களையும், வீட்டின் முன் பகுதியையும் அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் தேவராஜின் வீட்டிலிருந்த 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியதாகக் கூறப்படுகிறது.

சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு

இந்தச் சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். சமீபகாலமாகப் பொதுமக்கள் பலரும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கிவருகின்றனர். இந்தச் சூழலில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism