Published:Updated:

‘சார்ஜும் போடலை; சும்மா நிறுத்தினாலும் தீப்பிடிக்குதே!'- திருச்சியில் பற்றியெரிந்த எலெக்ட்ரிக் பைக்!

தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பைக்

கடந்த சில நாட்களாகவே எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி பீதியடைய வைத்து வருகின்றன.

‘சார்ஜும் போடலை; சும்மா நிறுத்தினாலும் தீப்பிடிக்குதே!'- திருச்சியில் பற்றியெரிந்த எலெக்ட்ரிக் பைக்!

கடந்த சில நாட்களாகவே எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி பீதியடைய வைத்து வருகின்றன.

Published:Updated:
தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பைக்

பெட்ரோல் விலை உயர்வைத்தொடர்ந்து பலரும் எலெக்ட்ரிக் பைக்குகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். பெட்ரோல் விலையக்காட்டிலும் மிகக்குறைந்த அளவு மின்சாரத்தின் மூலமாக ஓடும் எலெக்ட்ரிக் பைக்குகளின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், கடந்த சில நாள்களாகவே எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி பீதியடைய வைத்துவருகின்றன. சமீபத்தில் வேலூரில் எலெக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டபோது அது வெடித்ததில், தந்தையும் மகளும் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதேபோல, திருவள்ளூரில் எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்ததில் வீட்டிலிருந்த பெட்ரோல் பைக், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசமாகின. இதற்கிடையே திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் ஒன்றும் தீப்பிடித்து எரிந்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பைக்
தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பைக்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். சிங்கப்பூரில் எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர், லோக்கல் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், அந்த எலெக்ட்ரிக் பைக்கைத் தனது நண்பரான பாலு என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தன்னுடைய அலுவலகத்தின் உள்ளே நிறுத்தியிருந்த எலெக்ட்ரிக் பைக்கை எடுத்து பாலு வெளியே நிறுத்தியிருக்கிறார். அப்போது எலெக்ட்ரிக் பைக்கில் இருந்து புகை வந்து, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. உடனே அருகிலிருந்தவர்களின் உதவியுடன் போராடி தீயை அணைத்துள்ளனர். இருந்தும் எலெக்ட்ரிக் பைக் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. சார்ஜ் போடும் சமயங்களில் எலெக்ட்ரிக் பைக் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நடந்துவரும் வேளையில் பயன்படுத்தப்படாமலும், சார்ஜ் போடாமலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism